அமீர் ஹைதர்கான்

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
அமீர் ஹைதர்கான்
90ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்து அதில் ஐம்பது ஆண்டுகளைக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக செலவிட்ட மாபெரும் போராளி அமீர் ஹைதர்கானின் வாழ்க்கைச் சரிதம் இது.ஹீலம் நதிக்கரையில் அமர்ந்து அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவரை காலம் மாற்றாந் தந்தையின் ரூபத்தில் விரட்டித் தள்ளுகிறது.கல்விக்காகவும்,உணவுக்காகவும்,ஒரு வேலைதேடியும் எங்கெங்கோ திரிந்த அவர் சோஷலிச அறிமுகம் பெற்று ரஷ்யாவில் பயிற்சியெடுத்து ஒரு பிரபலமான கம்யூனிஸ்டாக உருவான வரலாறு அருமையாகச் சித்தரிப்பு பெற்றுள்ளது.தலைமறைவு வாழ்க்கை,பல நாடுகளுக்குப் பயணம்,இயக்கத்தைக் கட்டுதல்,பாகிஸ்தானில் அந்திமக் காலம் என ஒரு சுவாரஸ்யமான எதார்த்த நாவலுக்கான தொனியில் ஒரு மாவீரரின் வாழ்க்கை நூலாக்கம் கண்டுள்ளது.