ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகள்
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகள்
திரையரங்குகளை நோக்கிவரும் ரசிகப் பெருமக்கள் திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் அல்லது வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டும் அல்லது திரைப்படத்தைப் பார்த்து ஒருவன் திருந்த வேண்டும்... இப்படித்தான் திரைப்பட இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் திரைப்படங்கள் குறித்துச் சொல்கிறார்கள்... சொல்வார்கள்! ஆனால், தன்னுடைய திரைப்படத்தைப் பார்த்துப் பார்வையாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட வேண்டும் என்று ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் கூறினார்! “திரைப்படம் என்ன சொல்லவருகிறது என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. பார்வையாளர்களை அலறவைக்கும் யுக்தியைப் பற்றித்தான் எனக்கு அக்கறை. ஒரு படம் நேர்த்தியாக அளிக்கப்படுவதன் மூலம் பார்வையாளர்கள் ஜப்பானில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்கள் ஒரே விதமாக திகிலுற வேண்டும்” என்றார் அந்த திகில் மன்னன். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் கதைகள் அனைத்தும் ஒரு கொலையையோ அல்லது திகில் சம்பவத்தையோ மையப்படுத்தி இருக்கும். சின்னஞ்சிறிய கதையை மர்ம சினிமாவாக எடுத்து ரசிகர்களை மிரட்டியவர் அவர். தமிழ்ப் படங்களில் கதாநாயகனை போலீஸ் அல்லது வில்லன் துரத்தும் போது வழியில் ஆட்டு மந்தையோ, மாட்டு மந்தையோ வாத்துக் கூட்டமோ வழிமறிக்கும். இந்தக் காட்சியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஹிட்ச்காக்தான். தொடக்கக் காலத்தில் மௌனப் படங்களுக்கு டைட்டில் கார்டுகள் எழுதிவந்த சிறந்த ஓவியர் ஹிட்ச்காக். இங்கிலாந்தில் பிறந்த அவர், உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க மர்மக் கதைக் களம் பேருதவி புரிந்தது. சினிமாவில் புதுமைகளைப் புகுத்திய திகில் மன்னன் ஹிட்ச்காக்கிடம் “சிறந்த திரைப்படம் எடுக்க என்ன செய்யவேண்டும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹிட்ச்காக் சொன்னது மூன்று அம்சங்கள். ஒன்று திரைக்கதை, இரண்டு திரைக்கதை, மூன்று திரைக்கதை. ஆம்! கதையை மட்டுமே நம்பி ஹிட்ச்காக் சினிமா எடுத்தார். அவருடைய ஒவ்வொரு மர்மக் கதையும் நிச்சயம் திகிலை ஏற்படுத்தும்; வாசிப்பதற்கு சுவாரசியம் நிறைந்தது. வாசகர்களின் குதூகலத்துக்காக ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகளில் சிறப்புடைய சிலவற்றை இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளோம். இனி, திகிலோடு உறவாடுங்கள்!
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகள் - Product Reviews
No reviews available