ஆழ்கடல் அதிசயங்கள்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆழ்கடல் அதிசயங்கள்
பசிபிக் மத்தி மீன்கள் கூட்டம் சுமார் 7 கி.மீ. நீளமும் 1.5 கி.மீ. அகலமும் கொண்டது என்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
சுமார் லட்சம் கிலோ எடைகொண்ட ஒரு நீலத்திமிங்கிலத்தின் குழந்தை பிறக்கும்போதே 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்குமாம்!அஞ்சாலை போன்ற பெரிய மீன்கள் தங்களின் பற்களைச் சுத்தம் செய்வதற்காகச் சிறிய மீன்களை வாய்க்குள் செல்ல அனுமதிக்கின்றன. இவ்வாறு சுத்தம் செய்யும் மீன்களை அவை உணவாக்கிக்கொள்வதில்லை.இப்படிப் பெரிய மீன்களுக்கும் சிறிய மீன்களுக்கும் இருக்கும் புரிதல் ஆச்சரியம் அளிக்கிறது.
ஒரு திமிங்கிலம் இறந்து போனால், சில வகை உயிரினங்கள் அந்தச் சதைப் பகுதியை மட்டும் சாப்பிட்டு முடிக்கவே 18 மாதங்கள் ஆகுமாம்! இவை போன்று ஏராளமான அதிசயங்களை இந்தப் புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆழ்கடல் அதிசயங்கள் - Product Reviews
No reviews available