ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...
தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.