6174

6174
வாத்தியார் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு வெகு நம்பிக்கையோடு சொல்கிறேன்.சுதாகரின் 6174 போல் இதுவரை தமிழில் அறிவியல் புனைகதை இத்தனை செறிவோடு வந்ததில்லை. இனி வந்தால் ஆச்சரியமான ஆனந்தமாக இருக்கும். பிரம்மாண்டமான கதைக்களத்தை அநாயாசமாகக் கையாள்கிறார் சுதாகர். முதல் நாவல் என்று நம்ப முடியவி்ல்லை. அறிவியலும் புனைகதையும் தனித்தனி ட்ராக்கில் போகாமல் ஒன்று கலந்நு விரைகிற நடை. இளைய தலைமுறை Gen Next வாசகர்களுக்க நிச்சயம் பிடிக்கம். மற்றவர்களுக்கு கவலை வேண்டாம். தாதர்/கல்யாண் பாஸ்ட் ரயிலுக்கு தாதர் ஸ்டேஷனில் காத்திருந்தால், நிங்கள் வண்டியில் ஏறத் தேவையில்லாமல் சூழ நிற்கிற கூட்டம் உங்களை ரயிலக்குள் தள்ளிவிடும். மின்னல் வேகத்தில் விரையும் ரயிலில் விழுந்துவிடாமல் பக்கத்தில் அது அடர்ந்து நின்று இறங்க வேண்டிய ஸ்டேஷனில் முன்னாள் எக்கி இறக்கி விட்டுவிடும். சுதாகரின் கதைக்குள் நுழைந்தால் அதே வேகம். நாவல் தொடங்கி, நடந்து முடியும் அழகைப் பற்றி இதுக்குமேல் நான் சொல்லக்கூடாது. கதையே சொல்லும், படியுங்கள்.
இரா.முருகன்