108 திவ்யதேச உலா-பகுதி-2

108 திவ்யதேச உலா-பகுதி-2
தினகரன் ஆன்மிக மலர் இதழில் வெளியான 108 திவ்யதேச உலா தொடருக்கு ஏகோபித்த பாராட்டுகள் குவிந்துகொண்டே இருப்பதன் நற்பயன் - இந்த இரண்டாவது பாகம்.
‘சுவாரஸ்யமிக்க ஒரு நாவலைப் படிப்பதுபோன்ற உணர்வில் ஆழ்ந்தேன்’, ‘புத்தகத்தைப் படிக்கும்போது ஏதேனும் இடையூறு வந்தால் குறைந்தபட்சம் அந்த அத்தியாயத்தையாவது முழுவதுமாகப் படித்து முடித்துவிட்டுதான் அது என்ன இடைஞ்சல் என்று கவனிப்பேன்’, ‘ஏற்கெனவே பல திவ்ய தேசங்களை நான் தரிசித்திருந்தாலும் வெறும் எண்ணிக்கை அளவாகவே அவை அமைந்தன. ஆனால், இந்தக் கட்டுரை தினகரன் ஆன்மிக மலரில் தொடராக வந்தபோதும், பிறகு புத்தகமாக வெளிவந்தபோதும் படிக்கப் படிக்கத்தான், அந்த ஒவ்வொரு கோயிலையும் முழுமையாக தரிசனம் செய்த திருப்தி ஏற்பட்டது’, ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள கோயில்களின் வரைபடம், அந்தந்த கோயில்களுக்கு எப்படிப் போவது, எங்கே தங்குவது போன்ற பயணக் குறிப்புகள் பெரிதும் உதவியாக இருந்தன,’ ‘புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கோயில்களுக்கு இந்தப் புத்தகத்தையும் கையோடு எடுத்துச் செல்வேன்; புத்தகத்தில் விடுபட்ட தகவல் ஏதாவது அந்தக் கோயிலில் இருக்கிறதா என்று தேடுவேன்; ஆனால் ஏமாற்றம் எனக்குதான்; ஆமாம், அந்த அளவுக்கு ஒவ்வொரு கோயிலைப் பொறுத்தவரை எல்லா தகவல்களையும் கொண்டதாகவே இந்தப் புத்தகம் விளங்குகிறது,’ ‘மிகவும் அற்புதமான தயாரிப்பு, நேர்த்தியான தாள், அச்சு, தெளிவான புகைப்படங்கள். நம் மனம் விரும்பியவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுதும் போற்றிப் பாதுகாத்து வைக்கும் ஆனந்த பரிசாக அளிக்கும்வகையில் பெருமை கொண்டிருக்கிறது’
- இதெல்லாம் 108 திவ்ய தேச உலா -பாகம் 1 பற்றிய விமரிசனங்கள்.
இந்த விமரிசனங்களுக்கு முற்றிலும் தகுதியானதாக, மேலும் மெருகு கொண்டு மிளிரக்கூடிய வகையில் இந்த பாகம்- 2 வெளிவந்திருக்கிறது - உங்கள் பக்தி உணர்வுக்கு திவ்ய பிரசாதமாக. அபூர்வமான புகைப்படங்களும் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. பரவசத்தோடு வழிபட வண்ணப்படங்களும் உண்டு.