டாப் 100 அறிவியல் மேதைகள்
டாப் 100 அறிவியல் மேதைகள்
தகவல்களால் நிரம்பியது உலகு. அடுத்தவரின் ரகசியங்கள் நம்மைப் பொறுத்தவரை சுவாரசியங்கள். அவை எப்படிப்பட்டவையாக இருந்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்? வெற்றியின் ரகசியங்கள் நமக்கு படிக்கட்டுக்களாக அமைந்தால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மலைக்கச் செய்யும் வெற்றியாளர்களையும், சாதனையாளர்களையும் நாம் கொண்டாடுவோம். வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்ற வெற்றியாளர்களின் காலடிச்சுவட்டை பின்பற்றி நாமும் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். 100 அறிவியல் மனிதர்களைப் பற்றியது இது. அத்தனை மனிதர்களிடமும் எத்தனையோ தகவல்கள். அபூர்வங்கள். சாதிக்க துடிக்கும் உங்களுக்கு சரியான டானிக் தகவல்கள். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல... அமேசான். காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கியவர் ஜெஃப் பெசொஸ். தன்னுடைய கடுமையான உழைப்பினால் அமேசான் நிறுவனத்தை உருவாக்கினார். சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளிப் பயணத்திட்டத்தை ஆரம்பித்த இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். 23 பில்லியன் டாலர்! எப்படி இது சாத்தியம் எனக் கேட்டபொழுது அவர் சொன்னது: “பெரிதாகக் கனவுகள் எனக்கு; என் கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்தேன்; இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!” இதோ இப்படித்தான் சாதனை மனிதர்களின் மறுபக்கத்தையும், சாதித்த கதையையும் தாங்கி நிற்கிறது இந்தப் புத்தகம். எளிமையான நடையில் 100 அறிவியல் மனிதர்களின் வாழ்வை நமக்களித்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு அருஞ்சேவை செய்திருக்கிறார் இந்த நூலாசிரியர். நூலைப் படியுங்கள்... வெற்றி உங்கள் விரல் நுனியில்...
டாப் 100 அறிவியல் மேதைகள் - Product Reviews
No reviews available