ரைட்டர்ஸ் உலா
ரைட்டர்ஸ் உலா
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். பார்த்த தொலைக்காட்சி தொடரை பகிர்ந்து கொள்ளும்போதும் சரி, கண்டுகளித்த சினிமா குறித்து விவரிக்கும்போதும் சரி... பெண்கள் ஜாலம் புரிவார்கள்.
இன்று திரையுலகில் சாதித்த இயக்குநர்களும், மக்களுக்கு நன்கு அறிமுகமான ஆண் எழுத்தாளர்களும் தங்கள் இளமைக் காலத்தை குறித்து நினைவுகூறும்போது பாட்டியோ, அத்தையோ, அம்மாவோ, சகோதரியோ கதைகள் சொல்லி தங்களை வளர்த்ததை மறக்காமல் குறிப்பிடுவார்கள்.
அந்தளவுக்கு கற்பனை மனம் படைத்தவர்கள்தான் பெண்கள். நியாயமாகப் பார்த்தால் அவர்கள்தான் மிகச் சிறந்த கதை சொல்லிகளாக எழுத்துத் துறையில் புகழ்பெற்றிருக்க வேண்டும்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கு சமூக அமைப்பு முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தங்களை அழுத்தும் அனைத்து பிரச்னைகளையும் தாண்டி எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்குவது அவர்களுக்கு இயலாததாக இருக்கிறது. என்றாலும் இதற்கு மாறாக உலகெங்கும் சில பெண்கள் இதே சமூக அமைப்பில் வாழ்ந்தபடியே - பிரச்னைகளை சந்தித்தபடியே - எழுத்திலும் சாதித்திருக்கிறார்கள்.எப்படி அவர்களால் முடிந்தது என்பதைத்தான் இந்த நூல் விவரிக்கிறது. அந்தவகையில் எழுத்துத்துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் உற்சாக டானிக் ஆக இந்நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை..
ரைட்டர்ஸ் உலா - Product Reviews
No reviews available