வாவ் 2000
வாவ் 2000
புது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வு பிறந்து, உலகமே அதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, இந்தப் புத்தாயிரத்தைப் புதுமையான முறையில், அதேசமயம் விகடன் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எப்படி வரவேற்கலாம் என யோசித்தோம். சரித்திரம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை சுவைபடக் கூறினால் வாசகர்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அந்த வகையில், கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நடந்த முக்கிய சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து வரலாற்றுத் தொடர் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம். 100 வாரங்கள் _ அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, புது மில்லினியத்துக்கு வரவேற்புக் கூறும் விதமாக ‘வாவ் 2000’ என்ற தலைப்பிட்டு இந்த புதிய நூறு வாரத் தொடரை ஆனந்த விகடனில் ஆரம்பித்தோம். உலக சரித்திர நிகழ்வுகள் குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், தமிழில் இந்தத் தொடர் முதல் முயற்சி. பல ஆயிரம் வாரங்கள் வரக்கூடிய வரலாற்றை நூறே வாரங்களில் அடக்குவது என்பது சற்றுச் சிரமமான காரியம் என்பது வாசகர்களுக்குப் புரியும். இருப்பினும், மிக முக்கியமான சம்பவங்கள் எதையும் விட்டுவிடாமல் இந்தத் தொகுப்பில் இணைப்பதில் கவனமுடன் செயல்பட்டிருக்கிறோம். தொடர் வந்துகொண்டிருக்கும்போதே வாசகர்கள் அவ்வப்போது தெரிவித்த எண்ணங்கள், ஆலோசனைகள், விமரிசனங்கள் இந்தத் தொடரை மெருகேற்ற இன்னும் உதவின. விகடனில் தொடர் வெளியாகும்போதே மிகவும் ரசித்துப் பேரார்வம் காட்டிய வாசகர்கள், இந்தப் புத்தகத்துக்கும் அமோக வரவேற்பை அளிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!
வாவ் 2000 - Product Reviews
No reviews available