விரிந்த வயல்வெளிக்கப்பால்...
விரிந்த வயல்வெளிக்கப்பால்...
மித்ரன் என்றால் பலம் பொருந்திய, ஒளிக்கடவுள் அதாவது சூரியன் என்று பொருள் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இலக்கியத்தில் ஒளிவீசும் சூரியனாக தன் எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகை ஆட்சி செய்பவர் அசோகமித்திரன் என்றால் அது மிகையல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் எழுதிவரும் அசோகமித்திரன் தமிழின் முன்னோடி எழுத்தாளர். அவரது படைப்புகள் எளிய உரையாடல்களையும், எளிய மனிதர்களையும் பற்றியது. மனித வாழ்வை அழகாக எடுத்து இயம்புபவை. அவரது கதை மாந்தர்கள் மிகையுணர்ச்சி அற்றவர்கள். ‘அப்பாவின் சிநேகிதர்’ தொகுப்புக்காக 1996-ல் அசோகமித்திரன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் டெக்கான் ஹெரால்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற பத்திரிகைகளில் எழுதிய அசோகமித்திரன் சினிமாவை அங்குலம், அங்குலமாக அறிந்து வைத்திருப்பவர். இலக்கியப் பங்களிப்பிற்காக அவருக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இந்த ஆண்டின் திரு.வி.க. விருதை வழங்கியுள்ளது. அசோகமித்திரனின் கதைகளில் ஒருவித ரொமான்ஸ் துள்ளி எழும். இலக்கியத்தை தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று வேறுபடுத்த நினைக்காதவர். அவர் சொல்கிறார். ‘‘ஒரு நிஜக் கதை அனைத்துக் கோட்பாடுகளையும் கொண்டதாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் மக்களுக்கு நலம் தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு தலித் தான் தலித்தைப் பற்றி எழுத வேண்டும் என்றில்லை. பிரேம் சந்த் தலித் இல்லை. அவர் எழுதிய சத்கதி ரொம்ப விஷேசமானது. ஒரு தலித்கூட அந்த மாதிரி எழுதியிருக்க முடியாது.’’ நிதர்சனத்தை தைரியமாக சொல்லும் திறன் படைத்த அசோகமித்திரனின் படைப்புக்கள், பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். இளைய தலைமுறை அவசியம் வாசிக்கப்பட வேண்டியது அசோகமித்திரன் எழுத்துக்களைத்தான் என்ற எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் இலக்கிய சிகரங்கள் வரிசையில் அசோகமித்திரனின் கதைகளை தொகுத்து வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. வாருங்கள் அசோகமித்திரனை கொண்டாடலாம்!
விரிந்த வயல்வெளிக்கப்பால்... - Product Reviews
No reviews available