வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2) மர்மங்களின் சரித்திரம்
வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2) மர்மங்களின் சரித்திரம்
நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல: அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். இப்படிக்கூட நடக்குமா?' என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாற்றிலும் சமகாலத்திலும் நிறைந்து கிடைக்கின்றன.
ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மர்மங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்) மர்மங்களின் மாயத்தன்மையை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்.
பேய் - பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள்
அடங்காமல், தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும்
கருப்புப் பக்கங்களின் மீது நெருப்பின் ஒளிபாய்ச்சுகிறது இந்தப் புத்தகம்,
தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத
திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.
எழுத்தாளர் முகில், அச்சு ஊடகம் தொலைக்காட்சி சினிமா ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். முகலாயர்கள், அகம் புறம் அந்தப்புரம், யூதர்கள், செங்கிஸ்கான். கிளியோபாட்ரா, ஹிட்லர், நீ இன்றி அமையாது உலகு நம்பர் 1 (சாதனையாளர்களின் சரித்திரம்), சாலைப் போக்குவரத்துச் சரித்திரம், கிறுக்கு ராஜாக்களின் கதை பயனச் சரித்திரம், உணவு சரித்திரம் ஒலிம்பிக் டைரி குறிப்புகள், சந்திரபாபு, எம்.ஆர். ராதா என்று தமிழின் முக்கியமான நூல்களைப் படைத்திருக்கிறார்.
வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2) மர்மங்களின் சரித்திரம் - Product Reviews
No reviews available