தொழிலாளி டு முதலாளி!
தொழிலாளி டு முதலாளி!
‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ - என அன்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால், பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியிருப்பார். அந்தளவுக்கு இன்று எத்துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் அறிவிற் சிறந்தோங்கித் திகழ்கிறார்கள் பெண்கள். வீட்டில் இருந்தவாறே பெண்கள் பல வகையான சிறு தொழில்களையும் அதன் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அந்தத் தொழிலை பெரிய அளவிலும் கொண்டு சென்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் முடங்குவது மூடத்தனம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பக்குவப்பட்ட நிலையில்தான் இன்றைய மாதர் குலம் உள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைத் துச்சமென எண்ணித் தூக்கி எறிந்து, தங்களுக்குத் தெரிந்த தொழிலைத் தொடங்கி அதில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் பெண்கள், வீட்டில் வீணே கிடக்கவேண்டாம் என எண்ணி சிறுதொழில் தொடங்கி வெற்றிபெற்ற பெண்கள், தாங்கள் வெற்றிபெற்றது எப்படி என்பது பற்றிக் கூறிய கட்டுரைகள் அவள் விகடனில் தொடராக வெளிவந்தன. அதன் தொகுப்பு நூல் இது! இந்த நூலை வாசிக்கும் பெண்களுக்கு, தாங்களும் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பது திண்ணம்!
தொழிலாளி டு முதலாளி! - Product Reviews
No reviews available