திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்
திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்
பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் சுவாரஸ்யமான சிறுகதைகள், சரி, சற்றே பெரிய சிறுகதைகள் பின்னப்பட்டால் என்ற ஆசையின் விளைவே இந்தத் 'திரைபொரு கடல்சூழ்' மெட்ராஸ் என்னும் தொகுப்பு.
சதா ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் வங்கக்கடல் சூழ்ந்த மெட்ராஸ் எல்லா கதைகளுக்கும் பின்புலமாய் அமைந்திருப்பதும் ஒரு வகையில் சாதாரண மக்களோடு பின்னிப்பிணைந்து இருக்கும் வாழ்க்கையெனும் சாகரத்தின் அனுபவக் குறியீடுதானே!
இன்று நாம் காரிலோ பஸ்ஸிலோ கடக்கும்போது திரும்பிக்கூடப் பாராத ஜார்ஜ் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் தீவுத்திடலும் அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ சண்டைகளைப் பார்த்திருக்கின்றன. கையில் துப்பாக்கியுடனும் கண்களில் வெறியுடனும் படை வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்ல ஓடியிருக்கும் வீதிகள் இவை. இந்த நிலத்திடலில் வீழ்ந்த மனித உடல்களும் சிதறின ரத்தமும் சதைத்துளிகளும் சீந்துவாரின்றி சிதறிக் கிடந்த ஒற்றைச் செருப்புக்களும் அன்றைய வன்முறையைப் பறைசாற்றுகின்றன.
இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் வன்முறை இல்லையென்றாலும் பேச்சினாலும் எழுத்தாலும் திரைக் காட்சிகளாலும் சக மனிதனைத் தாக்கும் உணர்வு மீதான வன்முறை இருக்கிறதா இல்லையா என்பதை நாம்தான் மனதைத் தொட்டுப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்னும் சிந்தனையுடன்...
- ஜெயராமன் ரகுநாதன்
திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் - Product Reviews
No reviews available