தீராப் பகல்
தீராப் பகல்
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையும் சொல்லலாம். இவற்றில் விசாரத்தைவிட விசாரணையும் விசாரணையைவிட விவரிப்பும் வலுவானவை.
--சுந்தர ராமசாமி
1990 முதல் எழுதிவரும் எம். யுவனின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பே ‘தீராப் பகல்’. அவரது ஐந்து தனித் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் எழுதிய புதிய கவிதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. அறிந்தவற்றிலுள்ளில் இயங்கும் அறியப்படாத காலத்தையும் அறியத் தவறிய வெளியையும் பெருந்திரட்டின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.
தீராப் பகல் - Product Reviews
No reviews available