ததும்பி வழியும் மௌனம்
ததும்பி வழியும் மௌனம்
தமிழில் பத்தி எழுத்து என்ற ஒருவகை இலக்கியம் பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளாக பிரபலம் அடைந்துவருகிறது. ஆனால் பிரபல பத்திரிகைகளில் - பெண்கள் பத்திரிகைகளிலும் கூட - ஆண் எழுத்தாளர்களே இதுபோன்ற பகுதிகளில் இடம்பெற்றார்கள். பெண் மனம் விரும்புகிற ஓர் எழுத்தைப் பெண்ணால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ‘குங்குமம் தோழி’ இதழில் தொடங்கப்பட்ட ஒரு பத்தியை எழுதத் தொடங்கினார் அ.வெண்ணிலா. கணித ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், திரைப்பட இணை இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட அ.வெண்ணிலா, தமிழில் முதன்முதலாக ஒரு பிரபல பத்திரிகையில் பத்தி எழுதிய பெண் எழுத்தாளர் என்ற பெருமை பெற்றார். 38 இதழ்களில் அவர் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி சொற்சித்திரங்களாக அளித்தார்.
‘பெண்களின் உலகம் இதுதான்’ என்ற மாயையில் உழன்று கொண்டு, குறிப்பிட்ட வட்டத்துக்கு உள்ளேயே செய்திகளை அளித்து வந்த பத்திரிகைகளிலிருந்து வேறுபட்டு நிற்கவும், அழகிய மாற்றம் காட்டவும் ‘குங்குமம் தோழி’க்குப் பெரிதும் உதவியது அ.வெண்ணிலாவின் கட்டுரைகள். சாதாரண மனுஷியின் ஓட்டங்களில் தொடங்கி, சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரை அவர் தொடாத மனம் இல்லை. கல்வி முதல் காதல் வரை அவர் எழுதாத செயலும் இல்லை. இப்படி, பெண் எழுத்தைப் பொன் எழுத்தாக்கி இலக்கிய மணம் கமழச் அவரது குறிப்பிடத்தக்க படைப்பு இதோ... உங்கள் சிந்தனையைத் தூண்டும் அழகிய நூலாக
ததும்பி வழியும் மௌனம் - Product Reviews
No reviews available