தமிழ்நாட்டு நீதிமான்கள

0 reviews  

Author: கோமல் அன்பரசன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தமிழ்நாட்டு நீதிமான்கள

தமிழ்நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவரான கோமல் அன்பரசன், சமூக செயற்பாட்டாளராகவும், எழுத்தாளராகவும் இயங்குபவர். அரசியல், வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட துறைகளில் 15க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.

நவீன ஊடகவியல் தொடர்பாக இவர் எழுதிய நூல் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளைப் பற்றிய இவரது புத்தகம், சட்டத்தொழில் வரலாற்றில் முக்கியமான ஆவணம். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் மிக முக்கியமான சட்ட ஆளுமைகளைப் பற்றிய இந்த நூலையும் எழுதியிருக்கிறார். ஊடகப்பணி மற்றும் எழுத்துக்காக பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

மயிலாடுதுறையை அடுத்த கோமல் கிராமத்தைச் சொந்த ஊராக கொண்ட இவர், விவசாயத்திலும் மரம் வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவர். ‘காவிரி’ என்ற அமைப்பை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் சமூகப்பணிகளை முன்னெடுத்துவருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தப் பணியில் அவரோடு இணைந்து செயல்பட்டுவருகின்றனர். ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் சென்னை ‘ஆனந்தம்’ அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவர்.

நூல் குறிப்பு :

இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்புமாக உள்ளது இந்த நூல்.

தமிழ்நாட்டு நீதிமான்கள - Product Reviews


No reviews available