தமிழ் இதழியல் வரலாறு (மா.சு.சம்பந்தன் )
தமிழ் இதழியல் வரலாறு (மா.சு.சம்பந்தன் )
இந்நூலின் ஆசிரியர் மா.சு. சம்பந்தன். இவர் பல்வேறு இதழ்களைப் பற்றிய செய்திகளை அரிதின் முயன்று தேடி, அவற்றை முறைப்படுத்தி, இதழ்கள் வெளியான, கால கொண்டும். பொருளடக்கம் பற்றியும் என பல வகைகளில் இதழ்களை வகைப்படுத்தி இதழ்களைப் பற்றிய செய்திகளை முறைப்படுத்தி, அட்டவணையோடு வழங்கியுள்ளார். இதழ்களின் ஆசிரியர்கள் பற்றியும், எவ்வளவு காலம் ஒவ்வோர் இதழும் செயல்பட்டன என்றும் பல நுட்பமான செய்திகளை ஆய்வுசெய்து கூறியுள்ளார். இவையாவும் நாம் இதழியலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகும். அக்கால இதழ்களில் சிறுகதைகளும், நாவல்களும், இலக்கியங்களும் வெளிவந்துள்ளமையை அறிகிறோம். பல்வேறு தடைகளோடு இதழ்கள் வளர்ந்தமை பற்றியும், இதழ்களின் வழி தமிழ் நடை செம்மையாக வளர்ந்தமை குறித்தும் அறிந்து கொள்கிறோம். இவ்வாறு செய்திகளோடு 1987 இல் இந்நூலைப் பதிப்பித்துள்ளார். இத்துடன் தன் ஆய்வை நிறுத்திவிடாது, மேலும் கிடைத்த இதழியல் தரவுகளை இணைத்து, தவறுகள் ஒரு சிலவற்றைச் சரிசெய்து மீண்டும் பதிப்பித்துள்ளமை இவரது அயராத உழைப்பையும் இதழியலில் இவருக்கான ஈடுபாட்டையும் காட்டுகிறது.
தமிழ் இதழியல் வரலாறு (மா.சு.சம்பந்தன் ) - Product Reviews
No reviews available