சுதந்திர சரித்திரம்
சுதந்திர சரித்திரம்
காந்தி என்ற தனிமனித காந்தமும் காங்கிரஸ பேரியக்கத் தலைவர்களும் இந்திய அரசியல் சிந்தனையை ஒருமுகப்படுத்தினர். அறவழிப் போர் என்பது அகிலத்துக்கு அறிமுகமானது காந்தி என்ற ஒற்றை நம்பிக்கையில் தேசம் தன்னை தியாகத் தீயில் அர்ப்பணித்துக் கொள்ளும் வலிமை பெற்றது.
இந்திய விடுதலை பற்றிய படைப்புகளில் காந்தியின் பிம்பமே விசுவரூபம் எடுக்கும். ஆனால் இந்த நூலில் நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் காரணிகளும் மையம் கொள்கின்றன. எந்தவொரு தலைவரும் விதந்தோதப்படவில்லை. குறிப்பாக விடுதலைப்போரின் இறுதிக் கட்டத்தில், சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பும் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டிருந்த அவரது இராணுவத்தின் தீரமும் அவை ஆங்கிலேய அரசின் மீது ஏற்படுத்திய தாக்கமும் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய தலைமுறைக்கு காந்தி ஒரு கனவு மட்டுமே. ஒட்டு மொத்த இந்தியாவும் காந்தி என்ற தனிமனிதன் மீது வைத்திருந்த நம்பிக்கை இறைநம்பிக்கைக்கு இணையானது. இன்று இன்று அப்படியொரு நம்பிக்கைக்குரிய தலைவரைத்தான் தேடித்தேடி அலுத்து சோர்ந்து போயிருக்கிறது நம் சமூகம். கலங்கிப் போயிருக்கிற நமக்கு இந்நூல் நல்ல இளைப்பாறுதல் தருகிறது. நம்மை தூய்மைப்படுத்துகிறது.
சுதந்திர சரித்திரம் - Product Reviews
No reviews available