ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமணி

0 reviews  

Author: சுவாமி மணிசங்கரானந்தா

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  900.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமணி

நூல் அறிமுகம் :
- உள்ளதை உள்ளபடி பார்ப்பது அறிவு. உள்ளத்தில் உள்ளதை வெளியே உள்ளதாகப் பார்ப்பது மயக்க அறிவு. இதற்கு பிரமை என்று பெயர்.

- கயிறைக் கயிறாகப் பார்க்காத தவறால் அது பாம்பாகத் தெரியும் பிழை அறிவு உண்டாகிறது. அதனால் பயம், கவலை, துன்பம் முதலியன உண்டாகின்றன.

- கயிறு பாம்பாக மாறவில்லை. பாம்பு என்பதே அங்கு இல்லை. பின்னர் எங்கிருந்து பாம்பு முளைத்தது?

- பார்ப்பவரின் புத்தியில்தான் ‘பாம்பு புத்தி’ எழுந்து பயம், துன்பம், கவலை ஆகியவற்றை உண்டாக்கியது.

- தவறான அறிவால் துன்பம் விளைகிறது. துன்பத்தை நீக்க சரியான அறிவுதான் தீர்வு.

- நான் என்கிற சொல்லின் உண்மைப் பொருள் ஆத்மா. அழியாத, மாறாத, நிறைவான, அளவற்ற, அறிவுமயமானது ஆத்மா.

- அந்த ஆத்மாவை ‘நான்’ என்று அறியாததால் ஆத்மா அல்லாததாகிய உடல், மனம், புலன் ஆகிய மூன்றின் சேர்க்கையில் மலரும் அகந்தை எனும் உணர்வை ‘நான்’ என்று முடிவுசெய்துகொண்டு வாழ்வதே பந்தம். பந்தத்தால் துன்பம்.

- பந்தத்தின் கட்டவிழ்க்க என்ன செய்வது? ஜபம், தவம், தானம், யோகம், தியானம் முதலியன கட்டவிழ்க்குமா?

- அறியாமையால் உண்டானதை அறிவால்தானே சரி செய்யமுடியும்?

- பந்தத்தை அவிழ்க்கும் அறிவை எந்த நூல் வழங்கும்? விவேகசூடாமணி எனும் இந்த நூல் வழங்கும்.

-- ஆசிரியர்
சுவாமி மணிசங்கரானந்தா

நூல் பிரதிக்கு 📞9095605546

ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமணி - Product Reviews


No reviews available