சிதைவுகள்
சிதைவுகள்
1958 இல் வெளிவந்த Things Fall Apart சிதைவுகள் சிலுவ அச்சிபியுடைய முதல் நாவல் இது உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல் என்றும் சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
ஆப்பிரிக்க இனத்திற்கென்று ஒரு பண்பாடு உண்டு. வரலாறு உண்டு இலக்கியம் உண்டு என்று வெள்ளை உலகிற்கு காட்டுவதைத் தன் முதற் பணியாக கொண்ட அச்சிபி தன் நாட்டில் குடியேறிய வெள்ளையர்களை அவர்கள் மொழியிலேயே எதிர் கொண்டார்.
எளிய மக்களின் கதை மொழி நேரடியாக தான் அமையும் எனவே தான்
"சிதைவுகள்' மிக நேரடியாக ஆக்கள்கோ என்னும் மல்யுத்த வீரனின்
வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது.
இன்றைய ஆப்பிரிக்க நிலத்தில் சரி பாதிக்கும்
மேலான மக்கள் கிறிஸ்துவத்திற்குள்ளும் இஸ்லாத்திற்குள்ளும் அடைக்கலம் ஆகி விட அவர்களின் கதைகளும், கடவுள்களும், ஆவிகளும் இடமற்று அலைவதையே 'சிதைவுகள்' ஆக்கியிருக்கிறார் சினுவ அச்சிபி.
சிதைவுகள் - Product Reviews
No reviews available