செவக்காட்டுச் சித்திரங்கள்
செவக்காட்டுச் சித்திரங்கள்
செவக்காட்டுச் சித்திரங்கள்
சம்சாரிகளை யாவாரிங்க என்னைக்கு வாழ விட்டாங்க. 'தக்காளி அம்பதீசா, தக்காளி அம்பதீசா (50 பைசா )'ன்னு கடைக்காரன் ஏலம் போட்டான்.
"என்ன அதுக்குள்ளயும் தக்காளி வெலை எறங்கிருச்சா!" மக்காளி கத்தியே விட்டார்.
" ஆமாய்யா ஆமா... காய் வரத்து அதிகமாயிருச்சுய்யா" ன்னு சிரிச்சிக்கிட்டே கடைக்காரன் சொன்னான்.
நாயக்கருக்கு கோபம் வந்திருச்சு. "அதெப்படிவே... சுத்துப்பத்துல சம்சாரிங்க யாரும் தக்காளி போடல. கடைக்கு வரவும் இல்ல, நீரு எப்படி அம்பதீசான்னு 'தரைரேட்டு'க்கு கேக்கீரு?" அப்படின்னாரு.
"நாங்க யாவாரி... சொன்னது சொன்னதுதான்யா. வீணா பேச்சை வளக்காதீரும். போடணும்னா போடும். போடாட்டிப் போரும்...! நாங்களும் நாள் பூரா எவ்ளோ கஷ்டப் படுதோம்னு பாத்தீகளா?" அப்பிடிங்கான் கடைக்காரன்.
"ஆமாய்யா... ஏதோ ரெண்டு நோஞ்சான் மாடும், ஓட்டை மாட்டு வண்டியும், நிலம் நீச்சுத்தண்ணுன்னு கொஞ்சம் இருந்தா சம்சாரிதான் பெரிய பணக்காரன்னு நெனையாதீங்கய்யா. நாங்களும் உச்சியக் கொண்டி தரையில ஊனினாத்தான் பிழைக்க முடியும்!" - நாயக்கரு கோபத்துல பொழிதாரு.
"சம்சாரியவிட சஙகடப்பட்டவன் எவன்யா? எம்முன்னாடி வந்து காட்டுயா"ன்னு கொதிச்சுப் போனாரு நாயக்கரு.
செவக்காட்டுச் சித்திரங்கள் - Product Reviews
No reviews available