சதுரகிரி யாத்திரை
சதுரகிரி யாத்திரை
இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் மலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் கயிலாய மலை, பர்வத மலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் போற்றிப் புகழப்படுகின்றன. இத்தகைய மலைத் தலங்களுள் சதுரகிரியும் குறிப்பிடத்தக்க ஒன்று. சதுரகிரியின் மலைப்பகுதிக்கு மேலே இருக்கும் நூற்றுக் கணக்கான குகைகளில் சித்தர் பெருமக்கள் எண்ணற்றோர் இன்றைக்கும் அரூபமாக வீற்றிருந்து சித்து விளையாட்டுகள் புரிகிறார்கள். சக்தி விகடன் இதழில் புராண முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி பற்றி சிறப்பான தொடர் ஒன்று வெளியானது. 'குடந்தை ஸ்யாமா' என்ற புனைபெயரில் பி.சுவாமிநாதன் எழுதிய அந்தத் தொடர் வெளியாகும்போதே, அது தொடர்பான ஆன்மிக அன்பர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்
சதுரகிரி யாத்திரை - Product Reviews
No reviews available