சமைத்தால் குஷி சுவைத்தால் ருசி
சமைத்தால் குஷி சுவைத்தால் ருசி
நாற்பது நாவல்களையும், சில தொலைகாட்சித் தொடர்களுக்கு கதை - வசனமும் எழுதியுள்ளதோடு, இல்லத்தையும் நன்றாகவே பரிபாலனம் செய்து வருகிறார் என்பதற்கு அத்தாட்சியாக, இவர் எழுதிய சமையல் புத்தகங்களையும் கூறலாம். எதற்கு இதைக் கூறிகிறேன் என்றால், பெண் எழுத்தாளர்களில் - குறிப்பாக 'கிரைம்' நாவல்கள் எழுதிய அந்த காலத்து 'அகதா கிறிஸ்டி' முதல் இன்றைய 'ஹாரி பாட்டர்' புகழ் 'ரௌலிங்' வரை, எந்த பெண் எழுத்தாளர்களாவது, 'சமையல் புத்தகங்கள்' எழுதி இருப்பதாக சரித்திரம் இல்லை. ஆனால் சித்ரலேகா அவர்கள் எழுதிய 'இதயம் மந்த்ரா' சமையல் புத்தகமும், 'சமைத்தால் குஷி சுவைத்தால் ருசி' புத்தகமும் என் கைக்கு வந்தபோதுதான், பெண்மைக்குரிய ஸ்பெஷாலிடியான அடுப்படி சமாச்சாரங்களிலும், இவர் எவ்வளவு அத்துப்படி என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆவிபறக்க பதார்த்தங்களை பார்த்தால்தான் சப்புக் கொட்டும். ஆனால் அழகுபட வர்ணிப்பதைப் படிப்பதில்கூட சப்புக் கொட்டும் என்பது இவர் எழுத்தின் கைவண்ணம்.
- என்றும் அன்புடன் உங்கள்
கே.பாக்கியராஜ்
சமைத்தால் குஷி சுவைத்தால் ருசி - Product Reviews
No reviews available