செஹ்மத் அழைக்கிறாள் (மொழிபெயர்ப்பு )
செஹ்மத் அழைக்கிறாள் (மொழிபெயர்ப்பு )
காஷ்மிரில் வசிக்கும் ஓர் இளம் கல்லூரிப் பெண் செஹ்மத், மரணப்படுக்கையிலிருக்கும் தன் தந்தையின் இறுதி விருப்பத்தை அறிந்து கொண்ட பிறகு, அவரது தணியாத ஆர்வத்துக்கும், நாட்டுப் பற்றுக்கும் முன்னால் மண்டியிடுவதையும், கடுமையான முயற்சிகளோடு அவர் போட்டு வைத்திருந்த பாதையில் தொடர்ந்து செல்வதையும் தவிர அவளுக்கு வேறு வழிதோன்றவில்லை. ஒரு சராசரிப் பெண்ணாக இருந்த அவள் பயங்கரமான உளவுக்காரியாக மாற்றமடைந்ததன் தொடக்கம் அதுதான்,
பாகிஸ்தான் தளபதி ஒருவரது மகனை மணந்து கொள்ளும் அவளது புனிதப் பணி, பாகிஸ்தானிலிருந்து தான் இரகசியமாய்த் திரட்டும் இராணுவத் தகவல்களை இந்தியப் புலனாய்வுத் துறைக்குச் சீராக அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது மட்டுமே.
அளவு கடந்த தன்னம்பிக்கையோடும் துணிவோடும் இந்தச் செயலில் ஈடுபடும் அவள், தன் நேசத்துக்குரிய தாய்நாட்டின் கடற்படைத் திறனையே குலைத்துப் போடும் ஒரு பயங்கரமான தகவலை எதிர்ப்படுகிறாள்....
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் 'செஹ்மத் அழைக்கிறாள்' நாவல், உளவு வேலையில் ஈடுபடும் ஒரு பெண் குறித்த துப்பறியும் நாவல் மட்டுமல்ல. இந்திய பாகிஸ்தான் போரில் முகம் தெரியாமல் போன ஒரு கதாநாயகியின் வீர வாழ்க்கை வரலாறும் கூடத்தான்!
செஹ்மத் அழைக்கிறாள் (மொழிபெயர்ப்பு ) - Product Reviews
No reviews available