சாதியம் கைகூடாத நீதி
சாதியம் கைகூடாத நீதி
தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின்அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் தருணம் இது. ஒடுக்குமுறைகளின் நுட்பமான வடிவங்களை அடையாளம் காண்பதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் அவற்றுக்கெதிரான போரட்டங்களை ஒருங்கிணைப்பதுமான தலித் இயக்கங்கள் அறிவு ஜீவிகளின் செயல்பாடுகள் நம் ஜனநாயக அமைப்பின் போதாமைகளை உணர்த்துபவையாகவும் திட்டவட்டமான மாறுதல்களைக் கோருபவையாவும் புதிய வீச்சுகளுடன் மேலெழுந்து வருகின்றன.
ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்த நூல் அத்தகைய தீவிரமான அறிவுத்துறை செயல்பாட்டின் ஒரு பகுதி. கடந்த பல ஆண்டுகளின் தலித் சமுகத்தின் மீது தொடர்ந்து நிகழ்த்துப்பட்டுவரும் வன்முறைகளையும் தலித் சமுகம் எதிர்கொண்டுவரும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும்அவற்றுக்குக் காரணமான சாதி ஆதிக்கத்தையும் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் இந்நூல் தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்களின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தவும் முயன்றிருக்கிறது. காவல்துறை, நீதிமன்றங்கள், அரசுஅதிகார மையங்களின் அருவருப்பான நடைமுறைகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் சமரசமற்ற கூர்மையான விமர்சனங்களின் வழியாகவும் மறுக்க முடியாத ஆதாரங்களை முன் வைப்பதன் மூலமும் இந்த நூலை ஒரு போர்க் கருவியாக மாற்ற முயன்றுள்ளார்.
சாதியம் கைகூடாத நீதி - Product Reviews
No reviews available