புனலும் மணலும்
புனலும் மணலும்
ஆ.மாதவன் அவர்கள் எழுதியது
தமிழ்ப் புனைகதையின் களம் குடும்பப் பின்னணியிலிருந்து விலகி பரந்த பின்புலமாக உருப்பெற்று வந்த காலப் பகுதியில் எழுதப்பட்ட நாவல் 'புனலும் மணலும்'. சமிபிரதாயமான குடுமபப் பின்னணியும் அதன் சிக்கல்களும் இந்த நாவலும் உண்டு. ஆனால் அந்த சிக்கல்கள் மட்டுமே நாவலின் மையமல்ல. . . இந்நாவலின் மீது சொல்லப்பட்ட விமார்சனங்களைப் பின் தள்ளிவிட்டு 'புனலும் மணலும்' நாவல் இன்றும் சமகாலத்தன்மையுடன் நிலைத்திருக்கிறது. இன்று பரவலாக விவாதிக்கப்படும் பிரச்சனைகளுடன் படைப்பு காலத்தைக் கடந்து உறவுகொண்டிருக்கிறது. நாவல் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட முன்கால மனநிலை இன்று மாறியபோதும் நாவல் நிகழ்காலத்துக்குரியதாக விளங்குவது, சமகாலப் பிரச்சனைகளில் தொடர்பால் என்று கருதுகிறேன். மேலும் அழுத்தமாகச் சொல்வதென்றால் இன்றைய பிரச்சனைகள் பற்றிய அறிகுறிகளை நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அடையாளம் கண்டிருக்கிறது. படைப்பில் நிகழும் இந்த 'தீர்க்கதரிசனம்' மே 'புனலும் மணலும்' நாவலை மறுவாசிப்பில் கூடுதல் கவனத்தக்குரியதாக்குகிறது்.
புனலும் மணலும் - Product Reviews
No reviews available