பிராணாயாமக் கலை ( விகடன் )
பிராணாயாமக் கலை ( விகடன் )
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.
பிராணாயாமக் கலை ( விகடன் ) - Product Reviews
No reviews available