பேரியல் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்
பேரியல் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்
பேரியல் பொருளாதாரம் என்பது நாடுகளின் பொருளாதார அமைப்பு, செயல்பாடுகள், முடிவெடுப்புகள், போக்குகள் ஆகியன குறித்த இயலாகும்.
சாமானிய மக்களால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ள இயலாத பொருளாதாரப் போக்குகளே அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்போக்குகளின் திசையைப் புரிந்துகொள்வது வாழ்க்கை நிலையை கவனத்துடன் பரிசீலிக்கும் அனைவருக்கும் அவசியமானது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர், ஆய்வாளர்கள், பொருளாதார மாணவர்களுக்கு மட்டுமல்ல, குடிமக்களுக்கும் இது அவசியமாகும்.
அன்றாட வாழ்வில் வாழ்க்கைப் பொருளாதாரத்தைத் திட்டமிடுவதற்கும் நிகழ்வாழ்வின் பொருளாதாரச் சீரமைப்புக்கும் நாட்டின் பேரியல் பொருளாதார முடிவுகளை விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதாகும். அப்படி விளங்கிக்கொள்வது என்பது பேரியல் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் நிகழ முடியும். பேரியல் பொருளாதாரத்தில் காலந்தோறும் உருவாகிவரும் அடிப்படைக் கோட்பாடுகளைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி அதன் வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி/வீழ்ச்சி, நடைமுறைகள், செயல்பாடுகள், செல்திசைப் போக்குகள் ஆகியவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும், பொருளாதாரத்தைப் புரியவைப்பதற்குப் பெரிதும் பயன்படக்கூடிய இந்த நூல், தமிழில் அரிதாகப் பயன்படுத்தப்படும் பொருளாதாரக் கலைச்சொற்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு வருவதற்கும், உதவக்கூடும்.
பேரியல் பொருளாதாரம்: ஓர் அறிமுகம் - Product Reviews
No reviews available