பாலும் பாவையும்
பாலும் பாவையும்
'காதலைப் பற்றி நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது!" என்னால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில், தமிழனும் தமிழச்சியும் தொன்றுதொட்டுக் காதலையும் போரையும் தவிர வேறு ஒரு பாவமும் செய்து அறியாதவர்கள். 'பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரும்பாலும் கதை எழுதிக்கொண்டு வந்த தாங்கள், காதலைப் பற்றி ஏன் எழுதவேண்டும்?" என்று நீங்கள் கடைசியாகக் கேட்டிருக்கும் கேள்வி என்னைத் தூக்கிவாரிப் போட்டது நாள் என்னத்தைச் சொல்ல காதல் தோல்வியுறுவதற்குக்கூடக் காரணம் பொருளாதார நிலைதான்; அதைத்தான் இந்தக் கதையில் வரும் கனகலிங்கம் அகல்யாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான்; நமக்கும் சுட்டிக் காட்டுகிறான் கவிதைகளையொட்டி, காவியங்களையொட்டி 'பொருளுக்கு அப்பாற்பட்டது காதல்" என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம் ஆனால் இன்றைய உலகந்தில் நாம் காண்பது என்ன? பொருள் இல்லாவிட்டால் காதல் புகைகிறது. அல்லது காதலர்கள் மயானத்தில் புகைந்து விடுகிறார்கள்!- இதை நீங்கள் மட்டுமல்ல; உருவக் கவர்ச்சியின் காரணமாக ஏற்படும் காதலுக்கும் உள்ளக் கவர்ச்சியின் காரணமாக ஏற்படும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தம்முடைய கட்டுரையில் சாங்கோபாங்கமாக விவரித்திருக்கும் பதிப்பாசிரியர்கூட மறுக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்; அத்துடன், மனிதப் பண்பாட்டை உயர்த்தும் சாதல் சில சமயம் கற்புக்கு அப்பாற்பட்டதாகி, அதன் காரணமாக அறிவுக்கும் அப்பாற்பட்டதாகி விடுகிறது என்பதையும் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன்.
பாலும் பாவையும் - Product Reviews
No reviews available