ஒரு சித்த யோகியின் சரிதை (முதல் பாகம்)
ஒரு சித்த யோகியின் சரிதை (முதல் பாகம்)
பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அபூர்வமாக இறைவனின் அனுபூதி பெற்ற மகான்கள் பூமியில் அவதரிப்பார்கள் என்ற கூற்றுப்படி ஸ்ரீஇராமசந்திரர் ( சித்த யோகி ) புதுக்கோட்டையில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் 1906 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே இறைவனுடைய ஒன்றிணைந்துவிடும் 'பிரம்ம பாவம், ஐக்கிய பாவம்' ஆகிள ஸ்ரீவித்யா யோக மார்க்கத்தின் உயர்நிலைகளை தம்முள் அனுபவித்துணர்ந்தார். தன்னுடைய இஷ்ட தெய்வமாக மூலகணபதியை 'பரபக்தியில்' தீவிர உபாசனை புரிந்து மந்திர, தாந்திர சாஸ்திரத்தின் வாயிலாக மனோன்மணி சித்தி,யோகினி முத்திரா சித்தி, பிரணவ சித்தி போன்ற பலவகையான சித்திகளை கடுமையான ஸ்ரீவித்யா உபாசனை பயிற்சி முறையில் பெற்றார்.
வேதகால மகரிஷிகள் மேற்கொண்ட இல்லற வாழ்க்கையை பின்பற்றி பர்மாஷெல் என்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் 35 வருட காலச் சேவை புரிந்து அனைவரின் நன்மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்று 'கர்ம யோகத்திற்கு' எடுத்துக் காட்டாக விளங்கினார். ஸ்ரீ இராமசந்திரர் குடும்ப வாழ்க்கையில் பலவிதப் போரட்டங்களை சந்தித்து வந்தாலும் இல்வாழ்க்கையில் அவர் துவண்டு போய் மனம் வெறுத்து ஓடிப் போகவில்லை. லெளகீகத்திலும் சரி, ஆன்மீகத்திரும் சரி, தனக்கு விடப்பட்ட சவால்களை எல்லாம் துணிச்சலுடன் எதிர் கொண்டு அதில் உழன்று கொண்டே இயற்கையுன் தடைகளை விடாமல் துரத்திச் சென்று அதில் அவர் வெற்றிப் பெற்ற சுவாரசியமான சம்பவங்களையும், நிகழ்வுகளையும் இந்நூலில் விளக்கமாக எடுத்து கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவித்யா யோக மார்க்கத்தின் மிகச் சிறப்பான தனி வழி எனப் போற்றப்படும் பழனிக் குமரவேள்,அகத்தியர், திருமூலர், போகர் கடைபிடித்த 'சித்த யோக மார்க்கத்தை' பின்பற்றி பிரம்ம நிஷ்டையின் சிகரங்களை எல்லாம் சுலபமாக தொட்டு மகத்தான யோக சாதனையை புரிந்துள்ளார். அவருக்கு 'குரு' என்ற ஸ்தானத்தில் எவருமிலர். அதுபோல் சீடர்கள் என்பவருமில்லை. குருவின் துணையின்றி ஆன்மீக வாழ்க்கையினை தேடிச் செல்லும் அனைவருக்கும் ஸ்ரீ இராமசந்திரரின் வாழ்க்கை சரிதை பயனுள்ளதாக அமையும். மனித குல மேம்பாட்டிற்கும், அறிவின் பரிமாண வளர்ச்சியின் முன்னேற்றம் காணவும் இந்நூல் உறுதுணையாக விளங்கும் என்ற கருத்துடன் முதல் பாகம் நிறைவு காண்கிறது.
ஒரு சித்த யோகியின் சரிதை (முதல் பாகம்) - Product Reviews
No reviews available