நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2)
இயற்பியல் துறையில் 1951 முதல் 2000 வரை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. பெருமை மிகுந்த இந்தப் பரிசைப் பெறுவதற்கான அந்த உன்னதக் கண்டுபிடிப்பு என்ன என்பதையும், அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறது. ஏற்கெனவே, 1901 முதல் 1950 வரை இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள், ‘நோபல் வெற்றியாளர்கள்’ என்ற பெயரில் விகடன் பிரசுரமாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாவது பகுதி இந்த நூல். விஞ்ஞானிகளின் பிறப்பு _ இறப்பு குறித்த செய்திகள், ஆய்வுக்கூடங்கள், கண்டுபிடிப்புகளின் அரிய படங்கள் ஆகியவையும் அடங்கிய இந்த நூல், இயற்பியலில் ஆர்வம் உள்வர்களுக்கு மட்டுமல்லாமல் ஓர் எளிய வாசகனுக்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்போதும் சமூக நலனைக் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்... ஈகோ, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் விஞ்ஞானிகள் கூட்டாகப் பணிபுரிய வேண்டும் என்பது போன்ற பல நல்ல விஷயங்களையும் போகிற போக்கில் பொருத்தமாகச் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்