நீர்வழிப் படூ உம்
நீர்வழிப் படூ உம்
தமிழ் நாளல்களில் இதயரை இடம்பெற்றுள்ள கதையாந்தர்களின் அவைமான ஒருவர் எனக் காகுமாமாவைச் சொல்ல முடியும். வரவிதாரும் தலைமுறைகளாலும் மறக்கமுடியாததாகத் திகழவிருக்கும் காகுமாமாவின் மரணத்தோடு நாவல் தொடங்குகிறது காருமரமா என்னும் ஒற்றை மனிதனை மையமாக வைத்தே நாவல் பிள்ளப்பட்டிருந்தாலும் அவர் சார்ந்த அவர் வாழ்ந்துவந்த சமூகத்தின் மற்ற எல்லா மனிதர்களின் கதைகளாகவும் விரிந்து செய்கிறது இம்மகத்தான படைப்பு. தகிக்கும் வறுமையில் ஞாழவை எதிர்கொள்ளத் திணறிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்களின் முரட்டுத்தனத்துக்குள்ளும் மூர்க்கமான
கோற்றத்துக்குள்ளும் அவற்றின் ஆழங்களில் வந்துபோகாமலிருக்கும் ஈரத்தைத் தொட்டுப்பார்க்கிறது அதை மீட்டெடுக்க முயல்கிறது. வெந்து தணிந்த வாழ்நிலத்தில் அன்பும். மானுடப் பண்புகளும் துளிர்விடுகின்றன. துணைப்பாத்திரங்கள் என எதையுமே ஒதுக்கிவிட முடியாதவாறு கைவிடப்பட்ட தமிழகக் கிராமமொன்றின் தார்ந்துபோன பெருவாழ்வின் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்துகாட்டுகிறது. அவ்வளவு எளிதாகக் கடந்துசென்றுவிட முடியாத தாவலின் பல பகுதிகள் நம்மை ஸ்தம்பிக்க வைத்துவிடுகின்றன.
தேவிபாரதியின் இந்த நாவலை முன்வைத்து இரண்டு விஷயங்களைத் தயக்கமில்லாமல் பிரகடனம் செய்துவிடலாம். தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக 'தீர்வழிப் படூஉம்' எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பது முதலாவது. சமகால உலக எழுத்தாளர்களின் வரிசையில் நாம் பெருமிதத்தோடு வைத்துப் பார்க்கத்தக்க இன்றைய தமிழ் எழுத்தாளர் தேவிபாரதி என்பது இரண்டாவது,
நீர்வழிப் படூ உம் - Product Reviews
No reviews available