நந்தி நாயகன் (வரலாற்று புதினம்)
நந்தி நாயகன் (வரலாற்று புதினம்)
அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனதை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்.
கிருஷ்ணதேவ ராயரின் பேரரான அச்சுத ராயர் காலத்தில் நடக்கும் இந்த நவீனம், தஞ்சைப் பெரிய கோவிலில் செவ்வப்ப நாயக்கரால் நந்தி நிறுவப்படும் வரை, மிக அழகாகப் புனையப்பட்டுள்ளது. இன்று தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாம் காணும் பெரிய நந்திக்குப் பின்னே உள்ள கதை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக கோவில்களில் நடக்கும் தீப ஆராதனைகள் பற்றிய விளக்கங்களும், இசை பற்றிய நுணுக்கமான குறிப்புகளும், நாவலாசிரியரான மங்களம் ராமமூர்த்தியின் திறமைக்குச் சான்றுகள்.
ஒரு பெண் எழுதிய வரலாற்று நாவல் என்ற வகையில் இந்நாவல் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
நந்தி நாயகன் (வரலாற்று புதினம்) - Product Reviews
No reviews available