நைலான் கயிறு
நைலான் கயிறு
இது சுஜாதாவின் முதல் நாவல் ஆகும். 1968ல் குமுதத்தில் இது முதலில் வெளிவந்த போது தமிழ் வாசகர்களை சட்டென்று நிமிர்ந்து இந்தப் புதிய எழுத்தையும் கதை சொல்லும் விதத்தையும் கவனிக்க வைத்தது.தமிழ்நடையில் ஒரு புதிய சகாப்தம் இந்த நாவலில் துவங்கியது என்று சொல்லலாம்.சின்னச் சின்ன வாக்கியங்கள் இலக்கணத்துடன் சல்லாபம் செய்து, புதுமைபித்தன் ,லாசரா,ஜானகிராமன்,ஜெயகாந்தன் போன்றவர்கள் நடையில் ஏற்படுத்திய மாறுதல்களின் தொடர்ச்சி இது எனலாம்.நைலான் கயிறு பல பதிப்புகள் கண்டது. கன்னடத்திலும் , மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. ஒரு படக்கதையாக மாற்றப்பட்டது. பலமுறை திரைப்படமாக்கப்படுவதிலிருந்து தப்பித்தது.33 வருடம் கழித்து மீண்டும் ஒரு புதிய பதிப்பாக திருத்தமோ , மாறுதலோ எதுவும் தேவை இல்லாமல் வந்து இப்போதும் அதே உற்சாக நடையில் உள்ளத்தைக் கவருகிறது இந்த நாவல்.
நைலான் கயிறு - Product Reviews
No reviews available