நாயகன் நெல்சன் மண்டேலா
நாயகன் நெல்சன் மண்டேலா
மண்டேலாவும் அவரது சகாக்களும் சாதாரண கைதிகளுக்கான சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால். சிறையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவும். அதர வசதிகளும் மற்ற கைதிகளைக் காட்டிலும் தரம் குறைந்ததாகவே இருந்தன. சரியாகக் காய்ச்சப்படாத. மோசமான சுவை கொண்ட சோளக்கஞ்சிதான் உணவு. தினந்தோறும் காலை ஏழு மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை கல்குவாரி வேலை. அரவானால கொட்டடி. வேலை நேரங்களில் யாரும் இன்னொருவருடன் பேசக்கூடாது. மீறி பேசுபவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கும். கடிகாரம். நாட்காட்டி போன்றவை அவர்களது கண்களுக்கு மறைக்கப்பட்டன. சூரியன் கிழக்கே உதிக்கும், மெற்கே மறையும். அவ்வளவுதான். மற்றபடி அந்த நாள் திங்களா. வெள்ளியா என எதுவும் தெரியாது. ஆளுக்கு ஒரு கிழமை. ஒரு தேதி வைத்திருப்பார்கள. ஆனால். மண்டேலா மட்டும் தனது அறைக்குள் யாருக்முக் தெரியாமல் தானு ஒரு நாட்காட்டியை உருவாக்கி. அதன் மூலம் மற்றவர்களுக்கும் நாளையும் கிழமையையும் அறியச் செய்தார். சில மாதங்களுக்குப் பிற. மண்டேலாவுக்கும் அவரது சகாக்களுக்கும். சுண்ணாம்பு சுரங்கத்தை தோண்டும் பணி கொடுக்கப்பட்டது.மிகக் கடுமையான வெம்மையில் உடல் முழுக்க கொப்புளங்களாக வெடித்துக் கிளம்ப மண்டேலாவும் தோழர்களும் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்தக் காலங்களில் மண்டேலா மிகுந்த தலைமைப் பண்புடன் சோர்ந்து போகும் தோழர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தோன்றும் விதமாகப் பேசி புத்துணர்ச்சி அளிப்பார்.
நாயகன் நெல்சன் மண்டேலா - Product Reviews
No reviews available