நான் செய்வதைச் செய்கிறேன் (ரகுராம் ராஜன்)
நான் செய்வதைச் செய்கிறேன் (ரகுராம் ராஜன்)
ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில் ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும், அவருடைய ஆழமான புலமையையும், துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன.
- C. ரங்கராஜன்,
முன்னாள் RBI ஆளுநர்
ராஜன் ஒரு புகழ்மிக்க RBI முன்னாள் கவர்னர் மட்டுமல்ல. நிதி, முதலாளித்துவம், மக்களாட்சி ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவைப் பற்றிய உலகின் முதன்மையான சிந்தனையாளர். இந்த தெளிவான ஒளிமிக்க உரைகளும், கட்டுரைகளும் இன்றைய நிலை பற்றிய அவருடைய ஆழ்ந்த சிந்தனைக்கும், உன்னொளிகளுக்கும்; ஒரு முன்னுரை.
- பிரத்தாப் பானு மேத்தா
துணைவேந்தர்இ அசோகா பல்கலைக்கழகம்
ரகு ஒரு அபூர்வமான மனிதர், ஆழ்ந்த சிந்தனையாளர். சிறந்த நிர்வாகி. எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புபவர். அவருடைய கடந்த சில ஆண்டுகளின் எழுத்துகள்இ உரைகள் ஆகியவற்றின் இத்தொகுப்பு இன்னொரு பரிமாணத்தை கொண்டுவருகிறது; பொருளாதாரம், மைய வங்கி ஆகிய சிக்கலான உலகின் புதிர் அவிழ்த்து தெளிவாகச் சொல்லும் அவருடைய ஆற்றல்.
- நந்தன் நிலக்கனி
இன்ஃபோசிஸ் நிறுவனர்இ ஆதார் அமைப்பின் நிறுவனத் தலைவர்.
நான் செய்வதைச் செய்கிறேன் (ரகுராம் ராஜன்) - Product Reviews
No reviews available