மூன்றாவது கோணம்
மூன்றாவது கோணம்
ஒரு காலத்தில் தன் நாட்டை விரிவுப்படுத்திக் கொள்ள விரும்பும் அரசன் ,போர்த் தந்திரமாக அடுத்த நாட்டுக்கு ஒற்றர்களை அனுப்புவான்.ஒற்றனின் வேலையே எதிரியிடம் நட்பை சம்பாதிப்பது தான்.அந்த நட்பையும் பழக்கத்தையும் பயன்படுத்தி எதிரியைப் பற்றி அறிந்து தன் நாட்டுக்கு உளவு சொல்லுவான்.அந்த அடிப்படையில் இந்த அரசன் நட்பு கொள்வான் அல்லது போர்த் தொடுப்பான்.ஆக எதிரியை வெற்றி கொள்வான்.உங்கள் எதிரியை அழிக்க வேண்டும் என்று நீங்கள் புறப்பட்டால் அதில் எவ்வறவு தூரம் வெற்றி பெருவீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியாது.யார் கண்டது ,அந்த முயற்சி எதிரியை வீழ்த்துவதற்கு பதிலாக உங்களையே அழித்து விடும்.எல்லா உயிரினங்களுக்கும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று உந்துதல் இருக்கும்.நீங்கள் பகைவனாக நினைப்பவர்களிடமும் இந்த எதிர்ப்பு இருக்கும்.அவனை அழிக்கப் பார்த்தால் அவன் அவன் கடைசி வரை உங்களுக்கு அடக்கிவிடப் போராடுவான்.வாழ்வா சாவா என்ற நிலைமை வந்து விட்டால் அவனுடைய எதிர்ப்பு வலிமை மிகுந்து விடும்.அதனால் பகைவனை அழிப்பதற்கு பதிலாக அவன் மீதுள்ள பகையுணர்ச்சியை அழித்து விடுங்கள்.ஒருவர் மீது பகைமை இல்லாதபோது அவர் அதற்கு மேல் பகைவனாகத் தொடர இயலாமல் போகிறது.அடிப்படையில் இருக்கும் பகைமையை ஒழித்து விட்டால் ஒரு வேளை அவன் உங்களுக்கு நண்பனாகி விடலாம்.உங்களுக்கு பலம் சேர்க்கலாம்.
மூன்றாவது கோணம் - Product Reviews
No reviews available