மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய அந்தாதி இலக்கியம் ஓர் ஆய்வு
Author: அ.ம.சத்தியமூர்த்தி, கமலாலயன்
Category: இலக்கியம்
Stock Available - Shipped in 1-2 business days
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய அந்தாதி இலக்கியம் ஓர் ஆய்வு
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய அந்தாதி இலக்கியங்களை ஆய்வு செய்து மறைந்த பேராசிரியர் கெ. சுப்பராயலு அவர்கள் எழதிய நூல் இது. ஐந்து இயல்களில், ஆசிரியரின் வரலாறும் படைப்புகளும், அந்தாதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஆசிரியரின் அந்தாதி இலக்கியங்கள், இலக்கியச் சிறப்பு. சமயச் செய்திகள் எனப் பகுத்து விரிவாகவும், ஆழ்ந்த புலமைத் திறனுடனும் படைத்துள்ளார். ஆசிரியருடைய அந்தாதி நூல்களைப் பற்றித்திறனாய்வு செய்வதால் திறனாய்வு அணுகுமுறையும், அவரது நூல்களில் கூறப்படும் செய்திகளை வகைப்படுத்திப் பகுத்து ஆராய்வதால் பகுப்பாய்வு அணுகுமுறையும் பின்பற்றப் படுகின்றன. ஆசிரியருடைய வரலாறு பற்றிய செய்திகள் கூறப்படுவதால் வரலாற்று அணுகுமுறையும் கையாளப் பெற்றுள்ளது. பிற நூற் செய்திகளும் சித்தாந்தக் கோட்பாடுகளும் தேவையான இடங்களில் பொருத்திப் பார்க்கப் படுகின்றன. இந்த ஆய் வேடு 37 ஆண்டுகள் கழித்து நூல் வடிவம் பெற்றுள்ளது. 1987--ஆம் ஆண்டு முனைவர் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல் இது.
இந்த ஆய்வு நூலைத் தன் முனைவர் பட்டத்துக்காகச் சமர்ப்பித்து பட்டம் பெற்ற ஆய்வாளர் கெ. சுப்பராயலு அவர்கள் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் (அருள் மிகு பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி, பழனி ). சிறந்த பேச்சாளர். நல்ல எழத்தாற்றல் மிக்கவர். இடைக்கால இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பல்வேறு ஆய்வு இதழ் களில் இடைக்கால இலக்கிய நூல்கள் பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழதி வந்திருக்கிறார். முற்போக்கு எழத்தாளர்களுடன் நட்புறவு கொண்டிருந்தவர். எஸ். ஏ. பெருமாள் போன்ற தலைவர்களை அழைத்து வந்து கூட்டங்களை நடத்தியவர். கள ஆய்வுகளில் மிகுந்த ஆர்வங் கொண்டிருந்தவர்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய அந்தாதி இலக்கியம் ஓர் ஆய்வு - Product Reviews
No reviews available