மருந்து

0 reviews  

Author: தமிழில் சு.ராமன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மருந்து

மூலம் புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன்

ஒரு பொது மருத்துவமனை கட்டத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிகளையும் இந்நாவலில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா.
ஒரு வாசகனாக புத்தகத்தைத் திறப்பவன் வெகு சீக்கிரத்திலேயே அந்த மருத்துவமனையின் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் விழுந்துவிடுகிறான். மருந்து நெடி, சீழ் வடியும் புண்கள், பார்மலின் தொட்டியில் ஊறிக் கிடக்கும் பிணக் குவியல் ஆபரேஷன் மேடையில் கொப்புளிக்கும் பச்சை ரத்தம் பிரசவ அறையிலிருந்து எழும் அடி வயிற்று அலறல், பிராய்லர் கோழியாக உடலைக் கூறு போடும் போஸ்ட்மார்ட்ட அறை ஓசைப்படாமல் தன் வருகையை உணர்த்தி நிற்கும் மரணம்..மூச்சு முட்டிப் போகிறது.
இளமைத் திமிர், காதல் விரக தாபம் அர்ப்பணம் அலட்சியம் அதிகார போதை மரண பயம்..என்று பல்வேறு உணர்ச்சிக் குவியல்கள் மதிப்பீடுகள்.
முதன் முதலில் தம் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்த அந்த உணர்ச்சி மிகுந்த நாள்களை, மருத்துவர்களின் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மருந்துவ வாழ்க்கையை சாமானியனுக்கும் அறியத் தரும் டயரியும் கூட
மூலநாவலின் ஒவ்வொரு வரியையும் அதன் அழகும் அர்த்தமும் மாறிவிடாமல் வெகு கவனமாக மொழி பெயர்த்திருக்கிறார் சு.ராமன்

மருந்து - Product Reviews


No reviews available