மனிதரில் எத்தனை நிறங்கள்
மனிதரில் எத்தனை நிறங்கள்
சிறு வயதில் நடந்த ஒரு கொலைக்குச் சாட்சியாக இருக்கும் ஆர்த்திக்கு அக்கொலை பற்றிய சில விவரங்கள் கனவில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. சிறுவயதில் இருந்தே அவளை யாரோ தொலைவிலிருந்து கண்காணிக்கும் உணர்வும் அவளுக்கு ஏற்படுகிறது. சூழ்நிலைகள் காரணமாக சுமார் பதினெட்டு வருடங்கள் கழிந்து கொலை நடந்த வீட்டுக்கு அவள் திரும்பும் போது கொலையாளி உட்பட பலர் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். கொலையாளியாகப் பலர் சந்தேகிக்கும் நபரின் மகன் மீதே ஆர்த்தி காதல்வசப்படுகிறாள். சிறிது சிறிதாக கொலைக்கான காரணங்களின் புதிய பரிமாணங்கள் அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் ஆழ்மனதில் பதிந்த பழைய நிகழ்வுகளை ஹிப்னாடிசம் செய்து வெளியே கொண்டு வர முயற்சி எடுக்கப்பட, சூழ்ச்சி வலை அவளைச்சுற்றிப் பின்னப்படுகிறது. அவள்உயிருக்கே ஆபத்தும் ஏற்படுகிறது. நடந்தது ஒரு கொலையா, அதிகமான கொலைகளா என்றும் சந்தேகம் எழுகிறது. கொலையாளி யார் என்று தேடும் இந்த நாவலின் முடிவில் மர்மம் விலகினாலும், விலகாமல் உங்கள் நினைவில் நிரந்தரமாய் தங்குவது கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, அவர்கள் மூலமாக சொல்லப்படும் பாசிடிவ் வாழ்க்கைக்கான டிப்ஸ்களும் தான்.....
மனிதரில் எத்தனை நிறங்கள் - Product Reviews
No reviews available