கம்ப நாடர் புதிய வெளிச்சம்
கம்ப நாடர் புதிய வெளிச்சம்
இந்நூல் கம்பராமாயணத்தில் உள்ள காலக்குறிப்புகளை ஆராய்ந்து எந்த எந்த நிகழ்ச்சி எந்த எந்தக் காலத்தில் நடந்தது என்பதனை முதன்முதலாகத் தெளிவாக்குகிறது. இதில் வான்மீகத்தின் காலநிரலினும் கம்பநாடரின் காலநிரல் வேறானது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
விசுவாமித்திரனோடு இராமலக்குவர் வேள்விகாக்கப் புறப்பட்ட நாள்; திருமணத்தின்போது இராமன், சீதை ஆகியோர் வயது; யோசனை, காதம் என்னும் அளவுகளின் வரையறை; இராமன் வனவாசம் புறப்பட்ட காலம்; தசரதன் மறைந்த நாள்; காட்டில் வெவ்வேறு இடங்களில் மூவரும் தங்கியிருந்த காலம்; சீதை சிறையிருந்த மாதங்கள்; இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற பின் இராமன் முயற்சியின்றிக் கிடந்த நாள்கள்; இராமலக்குவர் கிட்கிந்தையை அடைந்த காலம்; அனுமன் சீதையைச் சந்தித்த நாள்; போர் நடந்த நாள்கள்; சீதை சிறை மீட்கப்பட்ட நாள் அமாவாசையா, பௌர்ணமியா?
இத்தகைய செய்திகள் கதிரவன், நிலவு இவற்றின் இயக்கம் பற்றிய கம்பநாடரின் புனைந்துரைகளைக்கொண்டு வரையறுத்துக் கூறப்படுகின்றன. கம்பராமாயணத்தில், இராவணவதம் வான்மீகத்தில் உள்ளது போல அமாவாசையில் நிகழ்ந்தாகக் காட்டப்படாமல் பௌர்ணமியில் நிகழ்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது என்பது இந்நூல் காட்டும் அரிய முடிவுகளில் தலைமையானதாகும்.
பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ச்சிகளை அவை நிகழ்ந்த காலக்குறிப்புகளோடு செம்மையாக அமைத்த கம்பநாடரின் மேதைமையை விளக்கிக்காட்டுகிறது இந்நூல்.
கம்ப நாடர் புதிய வெளிச்சம் - Product Reviews
No reviews available