கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்

0 reviews  

Author: மரு.வீ .புகழேந்தி மற்றும் மரு.ரா .ரமேஷ்

Category: ஆய்வுக் கட்டுரை

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்

மருத்துவர் வி.புகழேந்தி

1989-ல் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக தங்க விருது பெற்ற பின்பு, கல்பாக்கம் சத்ராஸ் கிராமத்தில் மக்கள் மருத்துவராகப் பணியைத் தொடங்கினார் மருத்துவர் புகழேந்தி, தலீத் மக்களுக்கும் மீனவ மக்களுக்கும் மருத்துவம் பார்ப்பதை தலையாயப் பணியாகக் கொண்டிருப்பவர். மருத்துவப் பணியை ஒரு மக்கள் இயக்கச் செயல்பாடாக மாற்றியவர். கல்பாக்கத்தில் அவர் மருத்துவப் பணியைத் தொடங்கியபோது, மக்களால் 'மூனு ரூபாய்' டாக்டர் என்று அழைக்கப்பட்டார். அல்பாக்கம் அணுஉலையைச் சுற்றி, நடத்துவரும் அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் உடல்நலக் குறைவுகளைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துகொண்டிருப்பவர். தான் ஆய்வு செய்யும் விஷயங்களை பத்திரிகைகளின் தயவின்றி தானே சிறு பிரகரமாக வெளியிட்டு தொடர்ந்து போராடி வருகிறார். வயலூரில் ஒரு மருத்துவமனையைக் கட்டி, அதன் கொத்தனாரையே வைத்துத் இறக்க முற்படும்போது, எதிர்பாராத விதமாக முன்னான் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.யாக அங்கு வந்தார். அவர், புகழேந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, புகழேந்தி ஒரு பிழைக்கத் தெரியாதவர். அவருடைய பெற்றோர்களும் அப்படியே. ஆனால், ஒவ்வொரு கிராமத்திற்கும் புழேந்தியைப் போன்ற பிழைக்கத் தெரியாதவர்கள்' தேவைப்படுகிறார்கள் என்றார்.

மருத்துவர் ரா.ரமேஷ்

மருத்துவர் ரமேஷ், தமிழுலகத்திற்கு கிடைத்த ஓர் அபூர்வ அறிவுஜீவி. இவருடைய முதல் பணி மருத்துவமாக இருந்தாலும், இவருடைய அரசியல், பண்பாட்டு பணிகள் பன்முகமாக விரிவடைந்து தமிழகத்தின் சுற்றுச்சூழல், அணு உலைகள், ஈழவிடுதலை உள்ளிட்ட போராட்டங்களுக்கு அடித்தனமாக அமைந்து வருகிறது. இப்போராட்டங்களில் எல்லோரும் விவாதிக்கும் தளத்திலிருந்து வேறுபட்டு, ஒவ்வொரு பிரச்சனையிலும் நவீன அறிவியல், தொல்லியல், மூவாயிரம் வருட தமிழின் வரலாற்றுத் துணைகொண்டு தம்முடைய அரசியல் காலக்கட்டத்தில், எதைக் கவனப்படுத்த வேண்டும் என்பதை துல்லியமாக வரையறுத்து, அதனைப் பகுத்து, தொகுத்து குறுகத் தரித்த குறன் போல தொடர்ச்சியான சொல்லாடல்களை உருவாக்கி வருபவர், ஆழமான அரசியல், மானுட அறம், போராட்ட மூர்க்கம் இவரின் கவசங்களாகும். கூடங்குளம், கல்பாக்கம், சேதுசமுத்திரத் திட்டம், ஈழ விடுதலைப் போர் ஆகியவற்றில் இவருடைய செயல்பாடுகள் களப் போராளிகளுக்கு புதிய மனவெழுச்சியை உருவாக்கித் தருகிறது. புகழ், விளம்பரம், பணம். அதிகாரம் ஆகியவற்றை பாம்புச் சட்டைகள் போல உரித்துக்கொண்டு, தன்னத் தனியாக இவருடைய பயணம் தொடர்கிறது.

காயசண்டிகை

மணிமேகலைக் காப்பியத்தின் பாத்திரமான காயசண்டிகை, தன் உடலின் காமம் கண்ணை மறைக்க பொதிகை மலை முனிவனின் நாவல் கனியை அறியாது மிதித்தவன். அவன் கொடுத்த சாபத்தால் ஆனைப்பசியென்ற தீராப் பதட்டத்தினை உடலின் நோயாகப் பெற்றவள். காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொள்வதற்கு முன்பாக அன்பின் ஊற்றாக அங்கு வந்து இறங்கிய மணிமேகலையின் நட்பைப் பெற்றவள், அவளது கரபியின் முதல் அன்னத்தைப் புரித்தவன். பதட்டம் என்பதைக் களைந்தவன், கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்குத் தென்கிழக்கே கடலின் ஆழத்தில் காலங்காலமாக அமிழ்ந்து கிடக்கும் அந்த எரிமலையை மணிமேகலைக் காப்பியத்தின் காயசண்டிகை என்ற பெயரைக் கொண்டு அழைப்பதே பொருத்தமாக இருக்கும். காயசண்டிகையின் பதட்டம் சுரபியின் அன்பால் இல்லாது போனதைப் போல, தமிழக மக்களின் காடற்ற கல்வி என்ற அன்னத்தால் எவரையும் துன்பப் படுத்தாமல் அது தன் பதட்டத்தைப் போக்கிக்கொள்ளும் என்ற தம்பிக்கை நமக்கு உண்டு. காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் விழுங்கியது. என்றாலும் காஞ்சியில் வாழ்வு தொடர்ந்தது. இதுவே உண்மை. அணுமின் நிலையங்களின் அமைவிடத்திற்கு அகுகாமையில் எரிமலை இருக்கிறதா என்பதை அறிய சர்வதேச அணுசக்திக் கழகம் முன்வைக்கும் முதல் கட்ட அடிப்படை அறிவியல் சான்றுகள் அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் முன் வைத்துள்ளோம். வேற்று நாட்டாரால் 0305-1 என்ற எண்ணைக் கொண்டு அழைக்கப்பட்டு சொந்த நாட்டு மக்களால் 258 ஆண்டுகளாக அறியப்படாத இந்த எரிமலையை, இனி காயசண்டிகை என்றே அழைப்போம்,

 

கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும் - Product Reviews


No reviews available