கல்லெழுத்தில் காலச்சுவடுகள்
கல்லெழுத்தில் காலச்சுவடுகள்
முதன் முதலில் தமிழில் கல்வெட்டுக்களைப் பொறித்த பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மர். செங்கல் பட்டு மாவட்டம் வல்லம் குகையில் இவர் பொறித்ததே தமிழின் முதல் கல்வெட்டு (பக் 19) என்னும் இனிய செய்தி, படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கல்வெட்டு வரையும் முறையில் ஓர் திருப்பத்தை ஏற்படுத்தியவர் முதலாம் இராசராச சோழன், கிரந்த எழுத்துக்கள் பல்லவர் ஆட்சியில் கி.பி.800ல் இன்றைய நிலையைப் பெற்றுவிட்டன. முதன் முதலில், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையைக் கல்வெட்டில் பொறித்தவன் இரண்டாம் ராசேந்திர தேவன். இவன் காலத்தில் கி.பி.1069ல் திருவொற்றியூரில் ஆதிபுரீசுவரர் கோவிலில் ஆலயக் கல் வெட்டு விளக்குகிறது. மதுரை மீனாட்சி கோவிலிலும் திருவெம்பாவை ஓத நிவந்தங்கள் தந்ததை அந்த ஆலயக் கல்வெட்டு கூறுகிறது.
திருமுருகன் பூண்டி, திருக்கண்டியூர் ஊர்க் கல்வெட்டுகளும், கர்நாடகத்தில் உள்ள தமிழ்க்கல்வெட்டுச் செய்திகளும் பழங்காலத் தமிழகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. தமிழின் செல்வாக்கு கன்னட பூமியில் பரவிக்கிடந்ததை இந்த நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளது பாராட்டத்தக்க தமிழ்த் தொண்டாகும்.எழுத்துப் பிழைகளை முற்றிலுமாக நீக்கி, இன்னமும் சிறிது எளிமைப்படுத்தினால் பாமரரும் இந்நூலைப் படித்து, பண்டைய தமிழர் வரலாறு அறிந்து வியந்து போவர்.
இந்நூல் கல்வெட்டுத் துறைப் பயணத்தில் புதிய மைல்கல்.
கல்லெழுத்தில் காலச்சுவடுகள் - Product Reviews
No reviews available