ஹிட்லர் - பா.ராகவன்

0 reviews  

Author: பா.ராகவன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  225.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஹிட்லர் - பா.ராகவன்

ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர். இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் ஹிட்லர்தான். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். குரூரத்தின் உச்சகட்டத்தை அநாயாசமாகக் கடந்து சென்றவர் ஹிட்லர். கரப்பான் பூச்சிகளை அடித்துக் கொல்வதைப் போல் மக்களைக் கொன்று குவித்தார். இவரது உத்தரவின்படி, நாஜிப்படைகள் மொத்தம் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர். வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத பெரும்சோகம் அது. பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார் பா. ராகவன். சதாமின் வாழ்க்கையையும் இராக்கின் அரசியல் வரலாறையும் ஒருங்கே சொல்லும் இவரது சமீபத்திய முக்கியப் படைப்பு, இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் .
 

விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர். உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர்.

தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான்.  ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.

ஹிட்லர் - பா.ராகவன் - Product Reviews


No reviews available