இறையனார் களவியல் உரை (முன்னிறுத்தும் சமயமும் அரசியலும்)
இறையனார் களவியல் உரை (முன்னிறுத்தும் சமயமும் அரசியலும்)
"இறையனார் களவியல் உரை: களவியல் காட்டும் அகமரபும் உரைமரபும்" என்ற பெயரில் பரிசல் வெளியீடாக 2021 இல் வெளிவந்த முதல் பகுதியைத் தொடர்ந்து வெளிவரும் இரண்டாம் ஆய்வுப் பகுதி இதுவாகும்.
தொல்காப்பியம் இருக்க, சுருக்கமான முறையில் அகப்பொருள் பேசும் தனி நூலாக, சைவ சமயத்தின் பெருமையை வலியுறுத்தும் நூலாக, பாண்டியர்களின் புகழை முன்னிலைப்படுத்தும் நூலாக இறையனார் களவியல் எழுதப்படுவதற்கான தேவை என்ன என்பதை இந்நூல் ஆராய்ந்துள்ளது.
இறையனார் களவியல் நூல், உரை, மேற்கோள் என்பவற்றை பிரித்து தனியே அகவொழுக்க நிகழ்வுகளை தொடர்புப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அனைத்தையும் எழுதியவர் ஒருவரே என்பதை முதல் பகுதியில் ஆராய்ந்து சொல்லப்பட்டதின் வழி ஆசிரியரின் நோக்கம் சைவ சமயத்தை பின்பற்றிய பாண்டியர்களிடமிருந்து பெரும் பரிசு பெறுவதே முதன்மை நோக்கமாக இருந்திருக்கக்கூடும் என்பதை இந்நூல் உறுதிபடத் தெரிவிக்கக் காணலாம்.
இறையனார் களவியல் உரை (முன்னிறுத்தும் சமயமும் அரசியலும்) - Product Reviews
No reviews available