எஞ்சிய பகல்

0 reviews  

Author: சிவரமணி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எஞ்சிய பகல்

சிவரமணி சிவானந்தன் (30.09.1967 19.05.1991) இருபத்து மூன்று வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக் கவிஞை. அவர் தன்னைப் பூமியிலிருந்து விடுவித்துக் கொண்டபோது தன்னுடைய கவிதைகளையும் எரித்து அழித்தார். யாரிடமாவது ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றையும் அழித்துவிடுமாறு தனது இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். சிவராமணியின் கவிதை. குடும்பம். சமூகம். தேசம் எனும் கைவிலங்குகளுடன் தீவிரமாகப் போராடும் ஒரு பெண்ணின் கடினமான பயணத்தை அடையாளஞ் செய்கிறது. அது யுத்தத்தின் நடுவில் வாழும் சூழமைவு காரணமாக அசாதாரணமாகவும் அதேசமயம் அதில் பேசப்படும் பெண்ணனுபவத்தால் எல்லை கடந்து தொடர்புபடக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. இலங்கையில் தமிழர்களின் அரசியலை வலியுறுத்துவதில் முக்கியமானதொரு வரலாற்றுக் காலத்தின் கொந்தளிப்புகளில் மிக நுட்பமாக ஈடுபடுவதால் அவரது சாட்சிக் சமத்துவத்திற்கான அவரது தீராத தேடலையும் புரட்சிமீதான நம்பிக்கையையும் எதிர்த்தல் எனும் செயற்பாட்டையும் மட்டுமின்றி. மரணம் பற்றியும் வேறுபட்டிருக்கும் அவரது கருத்து நிலைப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. கவிஞர் அகிலனின் பொருத்தப்பாடுடைய கவித்துவமானதும் அறிவுபூர்வமானதுமான முன்னுரையோடு ஆரம்பமாகும் அவரது கவிதைத் தொகுப்பானது நினைவு கொள்ளலின் முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகிறது. அத்துடன் இவரது கவிதை அதன் மெதுவான பரிணாம வளர்ச்சியினை எமக்கு முன்னாகத் திறப்பதுடன் எழுதுவது என்பதை தப்பிப் பிழைத்தலாகக் (survival) கொண்ட பெண்களது வம்சாவழியில் அதனை நிலைநிறுத்தவுஞ் செய்கிறது.

எஞ்சிய பகல் - Product Reviews


No reviews available