தாமுவின் நாட்டுப்புறச் சமையல்
தாமுவின் நாட்டுப்புறச் சமையல்
கால மாற்றமும் நகர வாழ்க்கையும் நம்மை சுவையான கிராமத்து உணவுகளை மறக்கச் செய்து விட்டன.
கிராமத்தில் சமையலை முறைப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருந்தாள். முன் காலத்தில் அலுமினியப் பாத்திரங்களை உபயோகப்படுத்தமாட்டார்கள். இரும்புச்சட்டி, மண்பாத்திரங்களையே அதிகம் பயன் படுத்தினார்கள்.
பொடி வகைகளை இடித்தும் மசாலாக்களை அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்தும் செக்கிலிருந்து ஆட்டிய எண்ணெய் வகைகளையும் சமையலில் சேர்த்துக் கொண்டார்கள்.
விறகு அடுப்பு, இரும்பு அடுப்பு, குமுட்டி அடுப்பு என்று ஒவ்வொரு சமையலுக்கும் ஏற்ப வித்தியாசமாகப் பயன் படுத்தினார்கள். இதனால் உணவும் விதவிதமான சுவையுடனும் சத்துக்களுடனும் இருந்தன.
கிராமத்து உணவு என்றாலே கஞ்சி, கூழ், நீராகாரம், பழைய சோறு, நாட்டுக்கோழி, முட்டை,மண்டி என வித்தியாசமாக இருக்கும். சுக்கு, மிளகு, திப்பிலியில் ரசம் வைப்பார்கள். இவற்றில் நல்ல மருத்துவ குணம் இருந்தது. இதனால் வயது முதிர்ந்தவர்களும் நல்ல கண்பார்வையுடனும் ஆரோக்கித்துடனும் நீண்ட நாள் வாழ்ந்தார்கள்.
இப்போது துரித உணவு சாப்பிடும் நகர வாசிகள் ஆரோக்கியக் குறைவுடனே வாழ்ந்து வருகிறார்கள். நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற இந்தப் புத்தகத்தில் உள்ள மண்மணம் கமழும் நமது பாரம்பரிய கிராமிய உணவு வகைகளை தினம் செய்து பாருங்கள். உண்டு மகிழ்ந்து நலமுடன் வாழுங்கள்.
-தாமோதரன்.
தாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Product Reviews
No reviews available