சினிமா வியாபாரம்
சினிமா வியாபாரம்
பெரிய பட்ஜெட்டோ, பிரபாமான நடிகர்களோ ,சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வசந்து சில தினங்களில் டிவிக்கு வந்துவிடுகின்றன. எனில் படத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் யார்? விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப்போகவேண்டுமா அல்லது பட்டி தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்ஷனை குவிக்கவேண்டுமா என்பதை இவர்களே முடிவுசெய்கிறார்கள். கோடிகோடியாகக் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலம்பு என்று விநியோகஸ்மர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்படத்தை ஒருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்குவது,வெளியிடுவது , அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வி இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே நிர்ணயிக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்களின் தொழிலுலக சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள கொள்ளவேண்டும். அதேபோல, ஒரு திரைப்படம் எப்படி யெல்லம் வியாபாரமாகிறது, எந்தெந்த வழிகளில் எல்லாம் தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், திரைப்பட விநியோகத்தில் அனுபவமுள்ள சங்கர் நாராயணின் இந்தப் புததகம் திரைத்துறையில் பயிலும் ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஓர் அத்தியாவசியமான கையேடு.
சினிமா வியாபாரம் - Product Reviews
No reviews available