காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்
காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்
"தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வருணிக்கப்பட்டவர் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ். அவர் ஒரு தேசத் தலைவரல்லர், எழுத்தாளர்தான். ஆனால் சர்வாதிகார ஆட்சிகள் மலிந்த லத்தீன் அமெரிக்காவில் உண்டாகும் ஒவ்வொரு அரசியல் பூகம்பமும் அவரது அபிப்ராயத்தை யாசித்து நிற்கிறது. மார்குவேஸ், பில் கிளிண்டனுடன் விருந்து சாப்பிடுவார்; ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் அரட்டையடிப்பார்! கொலம்பியாவின் புரட்சிகரப் போராளிக் குழுக்களுக்கும் அரசுக்குமிடையே எப்போதும் அவர் ஒரு சமாதானப் பாலம். மார்குவேஸின் மாய எதார்த்த எழுத்துவகை நமக்குத்தான் இங்கே விநோதம். உண்மையில் லத்தீன் அமெரிக்க மக்களின் அவல வாழ்க்கையை சற்றும் மிகையின்றி அப்பட்டமாக படம் பிடிக்கும் எழுத்து அவருடையது. நமக்கு மாய எதார்த்தமாகத் தெரியும் விஷயம்தான் தென் அமெரிக்காவில் எப்போதும் சுடும் நிஜமாக இருக்கிறது. மார்குவேஸ் அம்மக்களின் மனசாட்சி. அவர்களது உறைந்த மவுனத்தின் மொழிபெயர்ப்பாளர். தமது படைப்புச் சாதனைகளுக்காக 1982-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற காபிரியேல் கார்ஸியா மார்குவேஸின் வாழ்வையும் எழுத்தையும் மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது.
காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் - Product Reviews
No reviews available