புரூஸ்லீ சண்டையிடாத சண்டை வீரன்
புரூஸ்லீ சண்டையிடாத சண்டை வீரன்
ஒரு சினிமா ஸ்டண்ட் கலைஞன் என்ற அளவில்தான் நாம் புரூஸ் லீயைப் புரிந்து வைத்திருக்கிறோம். இந்நூல் முதன்முறையாக புரூஸ் லீயை ஒரு மகத்தான சண்டைக்கலைஞனாக, மேதையாக, ஜென் ஞானியாக, உலகம் முழுக்க தற்காப்புக் கலைப் படங்களுக்குப் புதுப்பாதை அமைத்தவனாக எழுத்தாளனாக, பெரும் வாசகனாக, முப்பத்துமூன்று வயதுக்குள் புகழ், பணத்தின் உச்சத்தை அடைந்துவிட்டு அமனாலேயே வெறுமையடைந்தவனாக, காதலின் உன்மத்தத்துக்காக தான் அடைந்த அத்தனையையும் பலி கொடுத்தவனாக நாம் முற்றிலும் அறியாத ஒரு புது சித்திரத்தை தருகிறது. ஒரு பெரும் சாதனையாளனின் வலிமைகளுக்கு நிகராக அவனது பலவீனங்களையும் சமரசமின்றி அலசுகிறது. அவன் இங்கு உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையே ஊசலாடும் ஒரு ஆன்மாவாக நம் முன் தோன்றுகிறான்.
புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்களில் இருந்து ‘முகமூடி வரை புரூஸ் லீயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என பேசுகிறது. மேலும் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களுடன் சண்டைப்பிரியர்கள், தத்துவ நாட்டம் உள்ளவர்கள், சினிமா ரசிகர்களில் இருந்து ஒரு சாதனையாளனின் வாழ்வை அறிய விரும்புபவர்களில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாசல்களை இந்த நூல் திறந்து வைக்கிறது.
புரூஸ்லீ சண்டையிடாத சண்டை வீரன் - Product Reviews
No reviews available